மதுரை:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவாகுமார், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல், சிவப்பு பீன்ஸ் பயிரிடப்படுகிறது. கடந்த 8 முறை இயற்கை சீற்றங்களால் பலமுறை டெல்டா மாவட்டங்களில் நெல் உள்பட பல பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதிலிருந்து விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டம் காப்பாற்றி வருகிறது.
இந்த காப்பீட்டு திட்டத்திற்கான பணம் ஒன்றிய, மாநில அரசு பங்கீட்டில் விவசாயிகள் பணம் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நெல் காப்பீடு தவிர்த்து பல பயிர்களுக்கு காப்பீடானதாக அறிவிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக நெல் பயிர்கள் அறுவடை செய்யக் கூடிய காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது.