மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடந்து செல்லவும், வாகனங்களில் பயணம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நடவடிக்கையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை மாநகரில் 2500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் போக்குவரத்து நெடுஞ்சாலை, தெருக்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலைகளில் தேவையின்றி திரியும் பொதுமக்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல இருச்சக்கர வாகனங்களில் திரியும் வாகன ஓட்டிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
வாகனச் சோதனையில் காவல் துறையினர் மதுரை மாநகரை பொறுத்தவரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை வெளியில் செல்ல அனுமதி உள்ளது. எனவே இதனை மீறும் பொதுமக்களையும், வியாபாரிகளையும் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகரை பொறுத்தவரை நேற்று மட்டும் 233 பேர் ஊரடங்கு தடைச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நேற்றுவரை 3 ஆயிரத்து 456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநகரில் ஊரடங்கை மீறியதாக 3679 பேர் கைது: 4403 வாகனங்கள் பறிமுதல்! இதில் 3ஆயிரத்து 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 4ஆயிரத்து 403 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 488 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 488 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.