சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உயிரிழந்த நிலையில், மீதியுள்ள ஒன்பது பேரும் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், வெயில் முத்து ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதி தாண்டவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையில் ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ், இருவருக்கும் ஜாமின் வழங்கும்பட்சத்தில் அவர்கள் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளதால் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தாண்டவன் இருவருடைய ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாட்டில் தடை!