கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செத மனுவில், " கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாமல், குறிப்பாக இருதய மருத்துவர், நரம்பியல் மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாமல் உள்ளனர். மேலும் விபத்து காலங்களில் உயிர்காக்கும் கருவிகளும் இல்லாமல், ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற வசதிகளும் இல்லை.
இதனால் நெஞ்சுவலி, விபத்து போன்ற அவசரங்களுக்கு வருவோர் மேல் சிகிச்சைக்காக, ஒன்றரை மணி நேர பயணித்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க உத்தரவிடுவதோடு, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்ற வசதிகளையும் ஏற்படுத்த ஆணையிட வேண்டும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.