தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறைக் கைதியைத் தாக்கிய வழக்கு: சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

பாளையங்கோட்டை சிறையிலுள்ள கைதி, செல்போன் வைத்திருந்ததாகக் கூறி சிறைக் காவலர்களால் தாக்கப்பட்ட புகார் குறித்த வழக்கில், பாளையங்கோட்டை சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்க செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Sep 28, 2021, 7:43 AM IST

மதுரை:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி. இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், “என் தந்தை சிவராமன் ஆயுள் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். அப்போது அவர் சிறைச்சாலையில் செல்போன் வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தினர்.

கைதியைத் தாக்கிய சிறை அலுவலர்கள்

இதைத் தொடர்ந்து எனது தந்தையைச் சிறையில் வைத்து சிறைக்காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையிலிருந்து எனது தந்தை சிவராமனை, சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர்.

அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவருகிறார். எனவே உடனடியாக அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து, உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும். அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அறிக்கைச் சமர்ப்பிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷா பானு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பாளையங்கோட்டை சிறைத் துறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல்செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சிவராமனுக்கு, அரசு மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சைத் தேவைப்பட்டால் பரிசீலிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சிறைக் கைதி திடீர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details