மதுரை: விக்கரமங்கலத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சாம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மந்தை அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது ஆண்டுதோறும் கிடா முட்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்த விழாவிற்கு அனுமதி கேட்டு மனு செய்திருந்தோம். ஆனால் விக்கிலமங்கலம் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். எனவே கல்புளிச்சாம்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கிடா முட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.