மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பாலமுருகன் என்பவர் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர், பத்திரப்பதிவு செய்து தருவதற்கு பணம் பெறுவதாகவும், சிக்கல் நிறைந்த பத்திரப்பதிவுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும் மதுரை மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் சென்றது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ. 2 லட்சம் பறிமுதல் - மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை
மதுரை: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான 10 பேர் கொண்ட அலுவலர்கள், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 28) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாலமுருகனிடமிருந்து 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணம், இடைத்தரகர் செல்வகனி என்பவரிடமிருந்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து பதிவாளர், இடைத்தரகரிடம் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு பறிமுதல் செய்த பணத்தை அரசு கருவூலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒப்படைத்தனர். மேலும், இந்த பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பதிவாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.