தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடமாடும் ஊர்தி மூலம் கரோனா தடுப்பூசி - மதுரை ஆட்சியர் தகவல் - Coronavirus vaccines through mobile vehicles

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடமாடும் ஊர்திகள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.

Coronavirus vaccines through mobile vehicles
Coronavirus vaccines through mobile vehicles

By

Published : Jul 1, 2021, 7:07 PM IST

மதுரையில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தடுப்பூசி, நடமாடும் ஊர்தியை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மக்கள் நடமாடும் பகுதிகள், காய்கறிச் சந்தைகள், கிராமப்புறப் பகுதிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் தடுப்பூசி ஊர்திகள் ஏற்பாடுசெய்யப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அனீஷ் சேகர், "மதுரையில் நாளொன்றுக்கு எட்டாயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நடமாடும் ஊர்தியைக் கொண்டு மக்கள் நடமாடும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி வரத்தைப் பொறுத்து செலுத்தப்பட்டுவருகிறது" என்றார்.


குழந்தை விற்பனை குறித்த கேள்விக்கு, தனியார் காப்பகம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் ஆட்சியர் பதிலளித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details