தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதிவரை அமலிலுள்ள நிலையில், 33 விழுக்காடு அலுவலர்களைக் கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா - காமராஜர் பல்கலைக்கழக ஊழியருக்கு கரோனா
மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
![காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா காமராஜர் பல்கலைக்கழகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:41:35:1595679095-tn-mdu-02-mku-coronavirus-effect-script-visual-25072020173353-2507f-1595678633-873.jpg)
காமராஜர் பல்கலைக்கழகம்
இச்சூழலில், பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் துறையில் பணியாற்றிவந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த வாரம் தொலைநிலைக் கல்விப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், தொடர்ந்து மூன்று நாள்கள் முழு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 25) முழு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் வசந்தா அறிவித்தார்.