மதுரையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 394ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் பூஜ்ஜியமாக பதிவான கரோனா உயிரிழப்பு - Corona death count in Madurai
மதுரை: கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 394ஆக உயர்ந்துள்ளது.
![மதுரையில் பூஜ்ஜியமாக பதிவான கரோனா உயிரிழப்பு Corona positive cases in Madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:59:52:1601990992-tn-mdu-04-corona-forecast-oct06-script-7208110-06102020183844-0610f-1601989724-1017.jpg)
Corona positive cases in Madurai
மதுரையில் கடந்த மார்ச் மாதம் கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 44. அவர்களில் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியோர் 15 ஆயிரத்து 960 பேர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 394 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 690 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் இன்று (அக். 06) மட்டும் 80 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.