தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மக்கள் ஒத்துழைப்பால் மதுரையில் கரோனா கட்டுக்குள் உள்ளது’ - மதுரை மாநகராட்சி

மதுரை: பொதுமுடக்க தளர்வுகளுக்குப் பிறகு மக்கள் தரும் ஒத்துழைப்பால் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

corona
corona

By

Published : Oct 6, 2020, 7:13 PM IST

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரமோகன், “தளர்வுகளுக்கு பின்னர் மாவட்டத்தில் கரோனோ பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களின் ஒத்துழைப்பால் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

அரசின் வழிகாட்டுதல்களை இன்னும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மழை, வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அங்கு முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

’மக்கள் ஒத்துழைப்பால் மதுரையில் கரோனா கட்டுக்குள் உள்ளது’

மழைக்கால நோய் தொற்றினை தடுப்பதற்கு மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், நீண்ட காலப் பணிகள் என்பதால், அதனை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்மாய்கள் ஆக்கிரமிப்பு: காவல் துறை வழக்குப் பதியாதது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details