மதுரையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், அந்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், கரோனா தடுப்பூசிகளை 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் செலுத்திக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியைக்கு கரோனா!
மதுரை: மருத்துவக் கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரி
இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, கல்லூரி வளாகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது. மேலும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க - தம்பதிக்குப் பாராட்டு