தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா 3ஆம் அலை: குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கட்டுப்பாடு - Childrens will affect at corona third wave

கரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும் என அச்சப்படும் சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கட்டுப்பாடு
குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கட்டுப்பாடு

By

Published : Jun 23, 2021, 7:22 PM IST

மதுரை: ஒன்றிய, மாநில அரசுகளின் கடும் போராட்டத்திற்கு இடையே கரோனா 2ஆம் அலை தற்போது கட்டுக்குள் வர ஆரம்பித்திருக்கும் நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் மூன்றாவது அலை தீவிரமாகக் கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கரோனா 3ஆம் அலை குழந்தைகளை பெரிதும் தாக்கும் எனக் கூறப்பட்டு இருப்பதால் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கான ஆதார் அடையாள அட்டையை எடுப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தையே நாடுவதால் நாளொன்றுக்கு 20 குழந்தைகளுக்கு மட்டுமே டோக்கன் முறையில் அனுமதி வழங்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் தற்போது ஆதார் அட்டை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details