தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பண மோசடி வழக்கு:தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன்

மதுரை: பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை

By

Published : Sep 7, 2020, 4:57 PM IST

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து தன்னிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ராமநாதபுரம் காவல் துறையினர், 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பண மோசடியில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக காவல் துறையினருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஞானவேல்ராஜா தரப்பில் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி, பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், 'மகாமுனி' படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ.6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.2.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது என கூறினார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வணிக நோக்கத்திலேயே பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது எனக்கூறி காவல் துறையினர் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு தர வேண்டும் என நிபந்தனையுடன் ஞானவேல் ராஜாவிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details