கரூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், "காவிரி ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக லாரிகள் பல மணல் திருட்டில் ஈடுபட்டுவந்தன. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி மணல் திருட்டுகள் தடுக்கப்பட்டு காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல்களை இரண்டு விற்பனை நிலையங்கள் அமைத்து ஆன்லைன் மூலம் பதிவுசெய்து விற்பனையானது நடைபெற்றுவருகிறது.
ஆன்லைன் மூலம் பதிவுசெய்பவர்கள் மணல் எடுக்கவரும் லாரி பதிவு எண்ணை பதிவுசெய்து மணல்களைப் பொதுமக்கள் பெற்றுவருகின்றனர். இதில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுப்பதற்கு அனுமதி தரவில்லை.
இதனால் ஏழை மாட்டுவண்டி உரிமையாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இது குறித்து பலமுறை மனு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசு விற்பனை நிலையங்களிலிருந்து மணல் எடுப்பதற்கு மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.