தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு முழுவதும் முழு கடையடைப்பு!

By

Published : Dec 8, 2020, 5:06 PM IST

திருவள்ளூர்: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் முழு கடையடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது.

protest
protest

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் தொடர்ந்து 13ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிவடைந்தது.

இதனிடையே இன்று(டிச.8) நாடு முழுவதும் முழுவதும் (பாரத் பந்த்) விவாசாயிகள் சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா, தமிழ்நாட்டில் திமுக உள்ளிட் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், நாமக்கல், திருவள்ளூர், நீலகிரி, திருவாரூர், தேனி, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது.

இதில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க:வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம்போல் ஓடிய பேருந்துகள்!

ABOUT THE AUTHOR

...view details