தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வங்கி, காப்பீட்டு நிறுவனத்தின் மீது புகார்! - காப்பீடு பாலிசியில் குளறுபடி

மதுரை: காப்பீடு பாலிசியில் குளறுபடி செய்ததாக வங்கி, காப்பீடு நிறுவனத்தின் மீது அப்பளம் தயாரிப்பு நிறுவனத்தினர் புகார் அளித்துள்ளனர்.

மதுரை ஆட்சியர் அலுவலகம்
மதுரை ஆட்சியர் அலுவலகம்

By

Published : Nov 9, 2020, 7:50 PM IST

இதுகுறித்து அப்பள நிறுவன இயக்குநர் பாலன், "மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி ரோடு முத்தமிழ் நகரில் அப்பள ராமன் எனும் அப்பள டிப்போ நடத்திவருகிறோம்.

கரோனா காலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட இழப்பு காரணமாக வரவு செலவுகள் வைத்திருந்த டிவிஎஸ் நகரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்றோம்.

கடனை பெறும்போது, வங்கியின் கடன் காப்பீட்டு திட்டத்தின்படி காப்பீடு பாலிசி கொடுக்கப்பட்டது. அதில் பல குளறுபடிகள் இருந்தன. ஜிஎஸ்டி எண் பதிவு செய்யவில்லை, தவறான தொலைபேசி எண் பதிவு உள்ளிட்டவை. அதனைச் சுட்டி காட்டியபோது வங்கியினரும், காப்பீடு நிறுவனமும் பொறுப்பு ஏற்க மறுத்தனர். அத்துடன் உரிய இழப்பீடு தர மறுத்தனர்.

எனவே எங்களுக்கு உரிய இழப்பீடை வங்கியும், காப்பீட்டு நிறுவனமும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா காப்பீடு வழங்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details