தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணம் கையாடல்: அடித்து துன்புறுத்தும் அதிமுக எம்எல்ஏ மீது தம்பதி புகார்! - Money laundering

மதுரை: முறைகேடான பணத்தை ஒப்படைத்தபோது, அதிலிருந்து கையாடல் செய்ததாகக் கூறி அடித்து துன்புறுத்தும் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தம்பதியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

complaint-against-aiadmk-mla-for-beating-and-harassing-couple-in-madurai
complaint-against-aiadmk-mla-for-beating-and-harassing-couple-in-madurai

By

Published : Dec 16, 2020, 2:21 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குள்பட்ட கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அவர் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ பா. நீதிபதியிடம் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் நேற்று (டிச. 15) முருகனின் தந்தை ராமர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "டிச. 15 எம்எல்ஏ வீட்டிற்கு சென்ற எனது மகன் முருகன், அவரது மனைவி சுமதி இருவரும் வீடு திரும்பவில்லை. அங்கு அவர்களை எம்எல்ஏவின் ஆள்கள் அடித்து துன்புறுத்துகின்றனர். அவர்களை மீட்டுத்தர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் காவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், வீடு திரும்பவில்லை எனக் கூறப்பட்ட முருகன்-சுமதி தம்பதியினர் சிறிது நேரத்தில் அதே காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்பேது, முருகன் காவலர்களிடம், "நேற்று ரூ.2 கோடி பணம் அடங்கி ஒரு பெட்டியை அடையாளம் தெரியாத நபர் என்னிடம் கொடுத்து, எம்எல்ஏ நீதிபதியிடம் கொடுக்கச் சொன்னார்.

தம்பதி புகார்

நானும் அதை எடுத்துக்கொண்டு சென்று எம்எல்ஏவிடம் ஒப்படைத்தேன். பெட்டியை சோதனையிட்ட எம்எல்ஏ, அதில் சுமார் ரூ.44 லட்சம் குறைவாக இருப்பதாத கூறினார். நான் எடுக்கவில்லை எனக் கூறிவிட்டேன். ஆனால் அவர் நம்பாமல் என்னையும், என் மனைவியையும் அடித்து துன்புறுத்தினார்.

பணத்தை திரும்ப அளிக்கவில்லை என்றால் தீர்த்துவிடுவேன் என மிரட்டல்விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். உடலில் காயங்களுடன் தம்பதி இருந்ததால் காவலர்கள், அவர்களை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details