மதுரை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர், காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 35 காவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் பதக்கங்களை வழங்கினார்.
இதேபோல் கரோனா தடுப்பு காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய சுகாதாரத்துறை, காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் 215 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.