மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த பிப்ரவரி மாதம் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தனக்கன்குளத்தில் நடந்த திமுக கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர் முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.