மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், படுகாயமடைந்தவர்கள் என, மொத்தம் 17 பேருக்கு அவர்களது கல்வி தகுதிக்கேற்ப பணி நியமன ஆணையை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: 17 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர்! - today news
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.
![ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: 17 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11841405-877-11841405-1621585900971.jpg)
Chief Minister MK Stalin
இந்நிகழ்வின் போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தொடரும் பூஞ்சையின் ஆட்டம்... ஆபத்தா வெள்ளை பூஞ்சை!