பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113 ஆவது ஜெயந்தி விழாவும், 58 ஆவது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோரிப்பாளையத்திலுள்ள முத்துராமலிங்கம் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கும், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்திற்கு செல்கின்றனர்.