மதுரை:சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் இன்று (டிசம்பர் 20) பொதுநல வழக்குகளை விசாரிக்கிறார். முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி பேசியதாவது,
“மதுரை மிகப் பழமையான நகரம்; கலை, கலாசாரம், பாரம்பரியத்தின் தலைநகராக உள்ளது. கிழக்கு ஏதென்ஸ் என மதுரை மாநகரம் அழைக்கப்படுகிறது. சமண தொல்லியல் சின்னங்கள் மதுரையில் அதிகமாக உள்ளன.