அந்தக் கடிதத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும்.
ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதைக் கணக்கிற் கொள்ளாமல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15ஆம் தேதிகளில் அறிவித்துள்ளது.
ரமலான் தேதிகள் மாறுகிறபட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.