தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடிக்கு கால அவகாசம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிசிஐடிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

cbcid-on-gokulraj-murder-case
cbcid-on-gokulraj-murder-case

By

Published : Apr 11, 2022, 12:25 PM IST

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த மனுவில், "கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிசிடிவி காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்ட பேட்டி, தலை மறைவாக இருந்த காரணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வழக்கின் சாட்சிகளாக பெரும்பாலும் அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். எனவே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வில் இன்று (ஏப். 11) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சீர்மரபு பழங்குடியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details