மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"என்.எம்.ஆர் சுப்பராமன் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய மனைவியும் அந்நிய துணி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு இருவரும் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.
ரயில் நிலைத்தில் பெயர் மாற்றம்
விடுதலைப் போராட்டத் தலைவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களின் பெயர்களை பொது இடங்களில் வைப்பது, சிலை வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அந்த வகையில், மதுரை ரயில்வே நிலையத்தின் முன்பாக என்.எம். ஆர். சுப்பராமன் வெண்கலச் சிலையை வைக்கவும், மதுரை ரயில் நிலையத்தின் பெயரை மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் ரயில்வே நிலையம் எனப் பெயரிடவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில், "இது தொடர்பான மனு தமிழ்நாடு அரசின் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எவ்வித உத்தரவையும் இதில் பிறப்பிக்க இயலாது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகனுக்குப் பிடியாணை