தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி வழக்கு! - Madurai Branch Court

மதுரை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி வழக்கில் சமூக நலத்துறை செயலர் பதிலளிக்க வேண்டுமென மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Case seeking injunction to control beggars
யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி வழக்கு!

By

Published : Dec 21, 2020, 5:42 PM IST

தமிழ்நாட்டில் யாசகர்களைக் கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட பழைய அரசாணையை ரத்து செய்து, அதிகரித்து வரும் அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், "கடந்த 1990 ஆம் ஆண்டு சாலைகளில் ஆதரவின்றி இருக்கும் யாசகம் வாங்குபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று மேலபாக்கம் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், காரணமின்றி யாசகம் கேட்கும் போலி யாசகர்களை காவல்துறையினர் கைது செய்து கட்டுப்படுத்தினர். ஆனால், இந்த நடவடிக்கை காலப்போக்கில் கைவிடப்பட்டது.

இதனிடையே, கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியினால் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்பட்டு ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டனர். காலப்போக்கில் இந்த திட்டமும் கைவிடப்பட்டது. 2017ஆம் ஆண்டு குழந்தைகளை கடத்தி யாசகம் எடுக்க பயன்படுத்தியவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து பல குழந்தைகளை மீட்டெடுத்து அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டது.

இதன்படி, அப்போது தமிழ்நாட்டில் இருந்த 32 மாவட்டங்களுக்கு சேர்த்து ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்களை வைத்து ஆதரவின்றி இருப்பவர்கள் யாசகம் எடுப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் தற்போது மதுரை, திருநெல்வேலி, சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் யாசகம் எடுப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல், கிறித்துமஸ், ரமலான் போன்ற பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக சிக்னல் போன்ற இடங்களில் யாசகம் எடுப்பவர்கள் அதிகரித்துவிட்டனர். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து பிச்சை எடுப்பவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.

யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி வழக்கு!

இந்த மனுவானது, இன்று (டிச.21) நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “ தமிழ்நாட்டில் யாசகர்களைக் கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட பழைய அரசாணையை ரத்து செய்து, அதிகரித்து வரும் அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தொடர்பில் சமூக நலத் துறைச் செயலர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2021 ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க :ஆதிதிராவிடர் என்பதை பழங்குடியினர் அல்லது வேறு தமிழ் வார்த்தையில் மாற்ற வழிமுறைகள் உள்ளதா?

ABOUT THE AUTHOR

...view details