தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 11, 2020, 2:19 PM IST

ETV Bharat / city

குமரியில் வெளிமாவட்ட காவல் துறையினரை நியமிக்கக் கோரி வழக்கு: உள் துறைச் செயலர், டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கு வெளிமாவட்ட காவல் துறையினரை நியமிக்க கோரிய வழக்கில் உள் துறைச் செயலர், டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை
மதுரை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த அசோக்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு பதற்றம் மிகுந்த மாவட்டமாகும். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மண்டைக்காடு கலவரத்தில் ஆறு பேர் இறந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அதேபோல 1998ஆம் ஆண்டு தேங்காய்பட்டணம் பகுதியில் இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் வெடிகுண்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. இந்த வழக்கில் புதுக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு பராமரிக்கும் காவல் துறையினரில் 90 விழுக்காடு சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

பெரும்பாலான காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளூரில் பணிபுரிந்து பதவிகளில் வந்தவர்கள் குறைந்த சதவிகிதத்தில் இருக்கும். அலுவலர்களும் உள்ளூர் காவல் துறையினரின் பேச்சை கேட்க வேண்டியுள்ளது. இங்குள்ள குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் வழக்குகள் குறித்து வருபவர்களுக்கு இங்குள்ள காவல் துறையினர் பெரும்பாலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களாக உள்ளனர்.

இதனால் இங்கு சட்டம்-ஒழுங்கை பராமரிக்க சிரமம் ஏற்படுகிறது எனக் கடந்த 2000 ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். மேலும் இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை உள்ளூர் காவல் துறையினர் அதிகளவில் உள்ளனர். இதனால் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையில் இருப்பதுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அவலம் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்ற வெளியூரிலிருந்து காவல் துறையினரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் அதே மாவட்டதில் பணிபுரியக் கூடாது என ஒரு நபர் ஆணையம் பரிந்துரையின் படி, கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதை இன்னும் நிறைவேற்றாதாது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஏன் இன்னும் பதற்றமான சூழல் உள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் எத்தனை பேர் பணி புரிகிறார்கள். 2000ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எப்போது நடைமுறை படுத்தப்படும் என்பது குறித்து உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details