தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - hc, mdu, bench, airport, international, announced

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய விமான போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்தக் கோரிய வழக்கு
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்தக் கோரிய வழக்கு

By

Published : Apr 26, 2021, 8:08 PM IST

சுற்றுலா முகவர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், '2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மூன்றாவது பெரும் நகரமாக மதுரை வளர்ச்சி பெற்று வருகிறது. இந்திய அளவில் 44ஆவது இடத்தில் வளர்ச்சி பெற்ற நகரமாக வளர்ந்து வருகிறது.

மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைந்துள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநில மக்களும் பயன்பெற உள்ளனர். மிகவும் பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது.

மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. மதுரை விமான நிலையம் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வந்தது.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்தக் கோரிய வழக்கு

தற்போது, குறிப்பிட்ட சில வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளன. 17,500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

மதுரையிலிருந்து சிங்கப்பூர், இலங்கை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன .
மேலும், பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் அந்நாட்டிலிருந்து மதுரைக்கு விமான சேவையை இயக்க தயாராக உள்ளன. அதற்காக விண்ணப்பித்தும் உள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. பழைய முனையம் தற்போது சரக்கு போக்குவரத்தை கையாளும் முனையமாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் 36ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், இந்த விமான நிலையம் ISO 9001-2015 சான்றிதழ் பெற்றுள்ளது. மதுரையை விட சிறிய விமான நிலையமாக உள்ள உத்தரப்பிரதேசம் குஷிநகர் விமான நிலையம், திருப்பதி விமான நிலையம் போன்றவை பன்னாட்டு விமான நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பு செய்யவேண்டும் என மக்களவையில் எம்.பிக்கள் குரல் எழுப்பியும் எந்த பயனும் இல்லை.

எனவே, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, மேம்படுத்த உத்தரவிட வேண்டும்' என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய விமான போக்குவரத்துத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details