மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என 7,072 கி.மீ பரப்பளவு உள்ளது. இதில் 5 தேசிய பூங்காக்கள், 15 வன உயிரினப் பூங்காக்கள், மேலும் ஆனைமலை, களக்காடு, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும் உள்ளன. இங்கு மிகவும் அரிதான தாவரங்கள், பறவைகள், கால்நடைகள், மீன் வகைகள் உள்ளன.
இவற்றை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்புச் சட்டதின் கீழ் சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் சோதனைச் சாவடிகள் அமைத்தும் கண்காணிக்க வேண்டும். இதே போன்று இரவு நேரங்களில் வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் வனத்துறை சோதனைச் சாவடி, அதிகாரிகள் அலுவலகம், குடியிருப்பு, மலை ஏறும் பகுதி, யானைகள் வசிக்கும் பகுதி மற்றும் சந்தன மரங்கள் உள்ள பகுதி ஆகியவற்றிலும் சிசிடிவி பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு சேமித்து வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.