தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யூ-ட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றக்கிளை அதிரடி - யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ரத்து

யூ-ட்யூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து
யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து

By

Published : Feb 10, 2022, 8:23 PM IST

மதுரை: யூ-ட்யூபர் மாரிதாஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக, யூ-ட்யூபர் மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு, திமுகவை களங்கப்படுத்தியதாக தூத்துக்குடி திமுக மாணவர் பிரிவைச் சேர்ந்த உமரி சங்கர் என்பவர், தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details