தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விஜயேந்திரருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய நாதக பிரமுகர் மீதான வழக்கு ரத்து!

காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காததால் அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நாதகவைச் சேர்ந்த கண். இளங்கோ மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

NTK ILANGO AGAINST KANCHI VIJAYENDRAR
NTK ILANGO AGAINST KANCHI VIJAYENDRAR

By

Published : Dec 11, 2021, 1:30 PM IST

மதுரை: 2018இல் நடைபெற்ற தமிழ் - சமஸ்கிருதம் விழா நிகழ்ச்சியில் அப்போதைய காஞ்சி இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண். இளங்கோ ராமேஸ்வரம் காஞ்சி மடத்திற்குச் சென்று விஜயேந்திரருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, ராமேஸ்வரம் கோயில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி கண். இளங்கோ சார்பில் மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

தியானத்தில் இருந்த விஜயேந்திரர்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல். அது தேசிய கீதம் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை.

இந்த விவகாரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது விஜயேந்திரர் தியான நிலையில், அமர்ந்து கண்களை மூடியிருந்தார்" என்றார். மேலும், கண். இளங்கோ மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Ashes Gabba Test: வீழ்ந்தது இங்கிலாந்து; காபாவில் மீண்டும் கொடி நட்டியது ஆஸி.,

ABOUT THE AUTHOR

...view details