தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'1500 மரங்களை வெட்டத் திட்டம், 15000 மரங்கள் நடக்கோரி மனு' - தொழில் துறை பதிலளிக்க உத்தரவு - Case against cutting down trees

திருச்செந்தூரிலிருந்து அம்பாசமுத்திரம் வரை சாலைப் பணிக்காக வெட்டப்படவுள்ள ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கக் கோரிய வழக்குத் தொடர்பாக தொழில் துறை நடைபாதைத் திட்டத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

'1500 மரங்களை வெட்டத் திட்டம்: 15000 மரங்கள் நடக்கோரி மனு' - தொழில்துறை பதிலளிக்க உத்தரவு
'1500 மரங்களை வெட்டத் திட்டம்: 15000 மரங்கள் நடக்கோரி மனு' - தொழில்துறை பதிலளிக்க உத்தரவு

By

Published : Jul 13, 2021, 4:42 PM IST

மதுரை:தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டீபன் லோபோ, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை - கன்னியாகுமரி தொழில் திட்டப் பிரிவின்கீழ் சாலை போடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூரிலிருந்து - அம்பாசமுத்திரம் வரை உள்ள சுமார் 1500 மரங்கள் வெட்டப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாலை ஓரங்களில் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த பெரிய மரங்கள் உள்பட நிழல் தரும் பல மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சாலையோர மரங்களை வெட்டாமல் மாற்று வழிகளைத் தெரிந்தெடுக்க வேண்டும்.

கண்டிப்பாக அகற்ற வேண்டிய மரங்களை மாநில நெடுஞ்சாலைத் துறை இயந்திரங்கள் உதவியோடு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி வளர்க்க வழிவகை செய்ய வேண்டும், வெட்டப்படுகின்ற ஒவ்வொரு மரத்திற்குப் பதிலாக புதிதாக 10 மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து சென்னை - கன்னியாகுமரி தொழில் துறை நடைபாதை திட்டத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details