தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயிர் பிரியும் நேரத்தில் கூட பயணிகளைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் - மதுரை டூ கொடைக்கானல் பேருந்து ஓட்டுனர் மரணம்

மதுரை மாவட்டத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர், பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணமடைந்தார். எனினும் பேருந்தை சரியான நேரத்தில் நிறுத்தி விபத்தைத் தடுத்து பயணிகளை காப்பாற்றினார்.

bus driver death incident at madurai
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

By

Published : Dec 9, 2021, 1:32 PM IST

மதுரை:ஆரப்பாளையத்திலிருந்து கொடைக்கானலுக்கு 30 பயணிகளுடன் பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ஆறுமுகம் இயக்கினார்.

பேருந்து, குரு தியேட்டர் சிக்னல் அருகே சென்ற போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, திடீரென பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஸ்டியரிங் மீது விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடத்துநர், உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். ஆனால் ஆறுமுகத்தை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

தன் உயிர் பிரியும் நிலையில் கூட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் ஆறுமுகத்தின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: 3 ராணுவ வாகனங்கள் வருகை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details