தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்ணன், தம்பி ஓட ஓட வெட்டி படுகொலை! - மதுரை போடி லயன் பழைய காலனி

மதுரை: முன் விரோதம் காரணமாக  பிரபல ரவுடிகளான அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் தம்பி ஒட ஒட வெட்டி கொலை!
அண்ணன் தம்பி ஒட ஒட வெட்டி கொலை!

By

Published : Jul 27, 2020, 2:55 PM IST

Updated : Jul 27, 2020, 3:01 PM IST

மதுரை போடி லயன் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில், முருகன். இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தனேரிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பத்து பேர் கும்பலாக இவர்களை சூழ்ந்து கொண்டு ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்எஸ் காலனி காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் செந்தில், முருகன் ஆகிய இருவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ் ,பாலா , சிவகுமார் என்பவருக்கும் இவர்களுக்கும் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Last Updated : Jul 27, 2020, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details