மதுரை: பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுகுமாறன். இவர் மாடக்குளம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு பட்டா பெற வேண்டி அணுகியுள்ளார். அப்போது அங்கு சர்வேயர் பணியில் இருந்த பாலமுருகன் பட்டா மாற்றம் செய்து தர ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் - சர்வேயர் கைது - Surveyor arrested
பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மதுரையில் சர்வேயர் ஒருவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் - சர்வேயர் கைது
இது குறித்து சுகுமாறன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனைப்படி இன்று(மே18) சுகுமாறன், சர்வேயர் பாலமுருகனுக்கு ரூ.5,000 லஞ்சம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:”அடேங்கப்பா” மலைக்கவைத்த மாவட்ட தொழில் மைய லஞ்சம்....