மதுரை: அவனியாபுரம் பகுதியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கிபி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் வெங்கடேசன் என்ற பக்தர் ஒருவர் முகவரி குறிப்பிடாமல் கடிதம் எழுதி வருகிறார்.
பக்தர் வெங்கடேசன் இன்று (அக்.5) எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் முன்பகுதியில் 'தினம் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதே கடிதத்தில் 'அம்மை அப்பா சரணம், மதுரை நாடார் பெண் அனுஷாவை என்னுடன் தினம் தினம் பலமுறை பேச வையுங்கள். இப்படிக்கு வெங்கடேசன்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.