தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கறுப்பு பூஞ்சை தாக்குதலால் மதுரையில் 301 பேர் பாதிப்பு!

மதுரையில் தீவிரமடையும் கறுப்பு பூஞ்சை நோய்த் தாக்குதலில், இதுவரை 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை ராசாசி அரசு மருத்துவமனை
மதுரையில் கறுப்பு பூஞ்சை

By

Published : Jun 21, 2021, 10:36 PM IST

Updated : Jun 22, 2021, 3:16 PM IST

மதுரை: தென்மாவட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 301 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதல் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு இல்லை

தற்போது மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் 138 பேரும், தனியார் மருத்துவமனையில் 33 பேரும் என மொத்தம் 171 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் இதுவரை கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை.

மேலும், போதுமான அளவு படுக்கை வசதிகளும், மருந்துகளும் இருப்பு உள்ளனவா என மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடு முழுக்க கரோனா தொற்று குறைந்தது!

Last Updated : Jun 22, 2021, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details