இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலும், 2019 தொடங்கி வரும் 30ஆம் தேதியோடு ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே வருகிற 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும்.
தடுப்பு ஊசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரத்ததான முகாம்கள், தடுப்பூசி போடுவதற்கு மக்களை தயார் செய்தல், கரோனா சிகிச்சைக்காக மக்களுக்கு தேவையான உதவிகள் என பல்வேறுவிதமான சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பூத் அளவிலும் நடக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நிர்வாகிகளும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, அந்த ஒரு நாள் முழுவதும் அந்த கிராமத்திலிருந்து சேவைப் பணி ஆற்ற வேண்டும்.
பாஜகவின் சேவை தொடரட்டும்: