மதுரை: சென்னையைத் தொடர்ந்து மதுரை மாநகர் பாண்டி கோயில் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் சாலையை மறித்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி இளைஞர்கள் சிலர் அந்த வழியே பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்து வருகின்றனர். அதோடு பைக் ரேஸ் நடத்துகின்றனர்.
குறிப்பாக பாண்டி கோயிலில் இருந்து கோமதிபுரம் செல்லக்கூடிய சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை சிலர் ஓட்டி சென்றும் சாகசத்தில் ஈடுபட்டும் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.