தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யாசகம் பெற்ற பணத்தை 7 ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக வழங்கிய முதியவர் - மதுரை செய்திகள்

மதுரை: யாசகம் பெற்ற பணத்தை கரோனா நிவாரண நிதியாக 10 ஆயிரம் வீதம் 7 ஆவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் ஒருவர் வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fund
fund

By

Published : Aug 1, 2020, 8:19 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்த பின்பு பொதுச்சேவையில் அதிக ஆர்வம் செலுத்தி வந்த இவர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அப்பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த பூல்பாண்டியன், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி, மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை, கடந்த மே மாதம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

அன்று தொடங்கி தற்போது வரை, 7 ஆவது முறையாக பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக இதுவரை, 70 ஆயிரம் ரூபாய் யாசகம் பெற்ற பணத்தை, கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் வினயிடம் வழங்கினார்.

பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

யாசகம் பெற்று நிவாரண நிதியாக வழங்குவதால் பொதுமக்கள் நல்ல மரியாதை தருகிறார்கள் என்று கூறும் பூல்பாண்டியன், இருக்கும் வரை இரக்கம் காட்டி உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை செய்வதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஆடி 18ஆம் தேதி ஊரடங்குத் தளர்வு வேண்டும்' - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details