மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராகப் பணியில் உள்ளார். இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல், விடுப்பு எடுத்துக்கொள்வது மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால், மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணிமாற்றி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் காவலர் முருகன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி, கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த கோர்ட்டு, நிவாரணம் வழங்க முனைகிறது, எனக் கூறினார். இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார் எனக்கூறி பணி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.