மதுரை: அவனியாபுரத்தில் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.
உலக புகழ்பெற்ற தமிழர் பாரம்பரிய ஜல்லிக்கட்டுகளில் முதல் ஜல்லிக்கட்டு தைத்திருநாள் முதல் நாளன்று அவனியாபுரத்தில் நடைபெறும். இங்கு இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக இதுவரை ஜல்லிக்கட்டுக்கான எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படாமல் இருந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், தனிநபர் பணம் வசூல் செய்து ஜல்லிக்கட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு விழா தொடர்பான பரிசுப் பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சியரிடமும், மேலூர் கோட்டாட்சியரிடமும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தனிநபர் பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்த மகிழ்ச்சியில் ஊர் மக்கள் இந்த சூழலில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்டது போன்று ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் கொள்ளலாம்” என்று உத்தரவு பிறப்பித்தது. இத்தீர்ப்பை வரவேற்கும் வண்ணம், அவனியாபுரம் முழுவதும் மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.