தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சரின் வேட்புமனுவை தகுதி நீக்க முறையீடு!

மதுரை: கடந்த 5 ஆண்டுகளாக தொலைபேசி கட்டணம் செலுத்தாததோடு அதனை வேட்புமனுவிலும் மறைத்த திருமங்கலம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரை தகுதி நீக்கக்கோரி அமமுக வேட்பாளர் முறையிட்டுள்ளார்.

udhayakumar
udhayakumar

By

Published : Apr 5, 2021, 4:12 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றும், இதனை தன் வேட்புமனுவில் அவர் மறைத்துள்ளதால் அம்மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமைச்சர் உதயகுமார் ஏற்கனவே தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சாத்தூரில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 17 ஆயிரத்து 393 ரூபாயை செலுத்தவில்லை. இந்த தகவலை தனது வேட்புமனுவில் அவர் மறைத்துள்ளார். அதற்கான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்துள்ளோம். மேலும் தனக்கு வாக்களிக்கும்படி தொகுதி மக்களுக்கு உதயகுமார் வாக்குக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆதலால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: சசிகலா பெயரை சேர்க்காவிடில் தேர்தலை ஒத்திவையுங்கள்- அமமுக ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details