தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊழலைத் தடுக்க வேண்டிய அலுவலரே லஞ்சம் வாங்கிய அவலம்

மதுரை: குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Nov 3, 2020, 8:44 AM IST

Anti-corruption department raids in Madurai
Anti-corruption department raids in Madurai

மதுரை - கற்பகநகர் பகுதியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், ஜான் பிரிட்டோ. இவர் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடமிருந்து லஞ்சம் பெறுவதாகவும், குடிமைப்பொருட்கள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் மாவட்ட லஞ்ச ஊழல் கண்காணிப்பு அலுவலகத்திற்குத் தொடர்ந்து ரகசிய புகார்கள் வந்துள்ளன.

இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட லஞ்ச ஊழல் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், இருப்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிமைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்க வேண்டிய அலுவலரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனை சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

'ஊழலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கினால்தான் ஊழல் ஒழியும்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details