தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அகரம் அகழாய்வுத் தளத்தில் கண்டறியப்பட்ட ‌மேலும் ஒரு உறைகிணறு! - கீழடி அகரம்

கீழடி அகரத்தில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது மேலும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.

உறைகிணறு கண்டுபிடிப்பு
உறைகிணறு கண்டுபிடிப்பு

By

Published : Sep 9, 2021, 6:24 AM IST

சிவகங்கை: மானாமதுரை அருகேவுள்ள கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் அகரத்தில் அகழாய்வின்போது 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வுப் பண்ணும்பட்சத்தில் அதன் ஆழமும், அகலமும் அதன் பயன்பாடுகள் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உறைகிணறு கண்டுபிடிப்பு

மேலும் அகரத்தில் இதற்கு முன்னர் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி நீளமுள்ள உறை கிணறும் மற்றொரு குழியில் ‌8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி நீளமுள்ள உறைகிணறு என இரண்டு உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உறைகிணறு கண்டுபிடிப்பு

தற்போது மூன்றாவதாக உறைகிணறு கிடைத்திருப்பதால், இது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க:கீழடி அகரத்தில் மீண்டும் உறைகிணறு கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details