தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் வீட்டில் இருந்த முதியவர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு - an old man was hacked to death by mysterious persons in madurai

மதுரையில் வீட்டில் இருந்த முதியவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
வீட்டிற்குள் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

By

Published : May 10, 2022, 7:07 AM IST

மதுரை: தல்லாகுளம் கமலா 2ஆவது தெருவை சேர்ந்த கிருஷ்ணாராம் தனது வளர்ப்பு மகள் நிவேதாவுடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன் வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதனால் நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கிருஷ்ணாராம் மர்ம நபர்களால் நேற்று காலை படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கொலை நடந்த வீட்டிற்கு தல்லாகுளம் சரக காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வளர்ப்பு மகளுக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானா ஆணவப் படுகொலை, காத்திருந்து கொன்றோம்... பகீர் வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details