மதுரை சிக்கந்தர்சாவடியில் ஸ்ரீமந்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கரகம் எடுக்கும் திருவிழா 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடும் திருவிழா - இதுதான் மதுரை சம்பவம்! - ஸ்ரீ மந்தையம்மன் கோவில்
மதுரையில் அம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் தரும் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி திருவிழா கொண்டாடும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர். இதுகுறித்தான ஒரு சுவாரஸ்ய கட்டுரை தங்கள் பார்வைக்கு...
கோவில் திருவிழா
அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற கரகத்திருவிழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்விதமாகவும் மக்களின் மனதில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும்விதமாகவும் ஸ்ரீமந்தையம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் தந்த கொடிக்கம்பத்தை ஊர்வலமாக எடுத்துவந்து, அதனை கோயில் முன்பாக ஊன்றி கொடி ஏற்றி கரகத் திருவிழாவை இன்று (ஏப்.6) தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்திலும் இஸ்லாமியர்களும் மகிழ்ச்சியுடன் எந்த ஒரு பாகுபாடுமின்றி பங்கேற்று இந்துக்களுக்கு மரியாதை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து நடத்திய மத நல்லிணக்க மொஹரம் திருவிழா!