மதுரை: கோபிநாத் என்பவரை கஞ்சா வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் கோபிநாத்துக்கு தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது. மூன்று வாரத்துக்குப் பிறகு நீதிமன்றம் சரணடையவும் உத்தரவிட்டது.
ஆனால் கோபிநாத் சரணடையாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் முன்பிணை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார். அதில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதால் நீதிமன்றத்தில் சரணடைய முடியவில்லை என்று கூறியிருந்தார்.
தனது மனுவுடன் தஞ்சாவூர் மருத்துவர் சி.பாலாஜி வழங்கிய மருத்துவச் சான்றிதழையும் அவர் தாக்கல் செய்தார். இந்நிலையில் கோபிநாத்தின் முன் ஜாமீன் மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.