கடந்த மாதம் சீனாவிலிருந்து ஜப்பானுக்கு வந்த தனியார் சொகுசு கப்பலில் கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று காரணமாக யோகோஹாமா துறைமுகத்திலேயே பல நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு மேலாக, அக்கப்பல் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக யோகோஹாமா துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அக்கப்பலில் ஐந்து தமிழர்கள் உள்பட 162 இந்தியர்கள் பணியாற்றிவந்தனர்.
அவர்களில் தமிழர் ஒருவருக்கு மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த மற்றவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு ஹரியானா மாநிலத்திலுள்ள ராணுவ மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.
அன்பழகன் வெளியிட்டுள்ள காணொலி இந்நிலையில், சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதாகவும் அதில் அவர்கள் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது ராணுவ முகாமில் உள்ள மதுரையைச் சேர்ந்த அன்பழகன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - 2,000 ஐபோன்களை இலவசமாக வழங்கிய ஜப்பான் அரசு